| ADDED : ஏப் 04, 2024 11:43 PM
ஆண்டிபட்டி : 'சூரியனை காணோம் வெயில் மறைந்து விட்டது' என்று அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் ருசிகர கமென்ட் செய்தார்.தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் உதயகுமாருடன் நேற்று ஆண்டிபட்டியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் பல இடங்களிலும் அதிகம் இருந்தது. மதியம் 1:40 மணிக்கு ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் சுட்டெரித்த வெயிலில் வரவேற்புக்கு பலரும் காத்திருந்தனர். ஆண்டிபட்டி வந்ததும் மேகமூட்டத்தால் வெயில் திடீரென்று மறைந்தது. அப்போது பேச துவங்கிய முன்னாள் அமைச்சர் உதயகுமார்,'சூரியனை காணோம் வெயில் மறைந்து விட்டது' என்ற கமென்ட் உடன் பேச்சை துவக்கியதால் அ.தி.மு.க., வினர் உற்சாக குரல் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.