உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் ஓட்டலுக்கு பூட்டு

மூணாறில் ஓட்டலுக்கு பூட்டு

மூணாறு, : மூணாறில் கழிப்பறை கழிவுகளை ஆற்றில் திறந்து விட்ட ஓட்டலை அதிகாரிகள் பூட்டினர்.மூணாறு நகரில் ஜி.எச்., ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் கழிப்பறை கழிவுகளை நேரடியாக ஆற்றில் திறந்து விடுவதாக புகார் எழுந்தது.அந்த ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி ஊராட்சி, சுகாதாரதுறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனையிட்டபோது கழிப்பறை கழிவுகளை கையாள வசதி இன்றி ஆற்றில் திறந்து விடப்பட்டது தெரியவந்தது.ஆகவே ஓட்டலை போலீசாரின் உதவியுடன் அதிகாரிகள் பூட்டினர். செப்டிக் டேங் உள்பட அனைத்து வசதிகளும் செய்த பிறகு ஓட்டலை திறக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ