உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொடர் மழையால் வரத்து குறைவு தக்காளி கிலோ ரூ.60 ஆக உயர்வு

தொடர் மழையால் வரத்து குறைவு தக்காளி கிலோ ரூ.60 ஆக உயர்வு

தேனி: மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் வரத்து குறைந்து இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது.தேனி மாவட்டத்தில் அதிக அளவிலான பூக்கள், காய்கறிகள் சாகுபடியாகின்றன. தொடர் மழையால் கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து குறைந்தது. தேனி உழவலர் சந்தைக்கு தினமும் 5 முதல் 6 டன் வரை தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 3.5 டன் மட்டும் விற்பனைக்கு வருகிறது. இதனால் ஜூன் 1ல் ரூ.30க்கு விற்கபட்ட தக்காளி நேற்று ரூ. 55க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 ஆகவும், பல்லாரி கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் ரூ. 70 வரை விற்பனையானது. சின்னமனுார் மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ. 700 முதல் ரூ.800 வரை ஏலம் போனது.உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் மார்ச், ஏப்.,ல் அதிக வெயில், வறண்ட வானிலை இருந்தது. அப்போது பலர் தக்காளி நடவு செய்திருந்தனர். ஆனால் மே மாதத்தில் பெய்த கன மழை தக்காளி பயிரை அதிகம் சேதப்படுத்தியது. இதனால் தக்காளி வரத்து மிக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கலாம். தக்காளி விலை குறைய ஒரு மாதம் வரை ஆகலாம். வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தாலும், விலையில் மாற்றம் இல்லை. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ