மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல் நால்வர் கைது
10-Feb-2025
தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சற்குணம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கூடலுார் ரோட்டில் நின்றிருந்த கூடலுார் சிவநேசனை 40, விசாரித்தனர். அவரிடமிருந்து ரூ.1200 மதிப்புள்ள 120 கிராம் கஞ்சாவை கைப்பற்றி, கைது செய்தனர். கேரள மாநிலம் கட்டப்பணை அருகே ஒருவரிடம் வாங்கி வந்ததாக சிவநேசன் விசாரணையில் தெரிவித்தார்.
10-Feb-2025