உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 43. அதே தெருவை சேர்ந்தவர் பிரபு 33. முருகன் ஜெயமங்கலம் குள்ளப்புரம் ரோடு டாஸ்மாக் கடையில் பார் நடத்தினார். பிரபு தேனி அல்லிநகரம் அருகே பின்னத்தேவன்பட்டி டாஸ்மாக்கில் பார் நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இந்நிலையில் மே 1ல், பிரபு பாரில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 900 மது பாட்டில்களை அல்லிநகரம் போலீசார் கைப்பற்றி, பிரபுவை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். போலீசாருக்கு முருகன் தகவல் கொடுத்ததாக பிரபு, முருகன் மீது கோபத்தில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வடுகபட்டி கலையரங்கம் அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது இதில் பிரபு, பட்டாக்கத்தியால் முருகன் தலையில் வெட்டினார். சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். தப்பி ஓடிய பிரபுவை பிடிக்க தென்கரை இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். நேற்று மதுரை செல்லூரில் மறைந்திருந்த பிரபுவை போலீசர் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி