உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய அறிவியல் தின கண்காட்சி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

தேசிய அறிவியல் தின கண்காட்சி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு

தேனி: கோடாங்கிபட்டி பூர்ண வித்யாபவன் சி.பி.எஸ்.சி., சீனியர் செகன்டரி பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நாளைய களம் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று, 72 படைப்புகளை காட்சிப்படுத்தினர். பள்ளி தலைவர் முத்துக்கோவிந்தன் கண்காட்சியை துவக்கி வைத்தார். பொருளாளர் முரளிதரன், செயலாளர் கிருத்திகா, பள்ளி நிர்வாக இயக்குனர்கள் ரேணுகாதேவி, குமார், அரவிந்தன், ஷியாம், விவேதா, ஹர்சவர்தன், சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான சென்சார் கண் கண்ணாடி,செயற்கை வானவில் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தினர். ஏற்பாடுகளை சீனியர் முதல்வர் சுபாஈஸ்வரி, சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் ஹேமாகண்ணகி ராணி, மெட்ரிக் பள்ளி முதல்வர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை