உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடைகளுக்கு புதிதாக கருவிழி பதிவு கருவி; கைரேகை பதிவு ஆகாதோர் பிரச்னைக்கு தீர்வு

ரேஷன் கடைகளுக்கு புதிதாக கருவிழி பதிவு கருவி; கைரேகை பதிவு ஆகாதோர் பிரச்னைக்கு தீர்வு

தேனி : மாவட்டத்தில் கருவிழிப்பதிவு கருவிகள் வழங்காத ரேஷன் கடைகளுக்கு அதனை வழங்க அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.மாவட்டத்தில் 542 ரேஷன்கடைகள இயங்கி வருகின்றன. குடிமைப் பொருட்கள் நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்கள் வழங்கும் போது கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., மிஷினில் ரேஷன் கார்டில் உள்ளவரின் கைரேகை பதிவு செய்து வழங்கப்படுகிறது. இதில் முதியோர், பெண்கள் பலருக்கு கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இவர்களுக்கு பிராக்ஸி எனப்படும் எழுதி பொருட்கள் வழங்கப்பட்டது. பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்காமல் பயோ மெட்ரிக் முறையில் அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு.அதற்காக கைரேகை பதிவாகாதவர்களுக்கு கருவிழி பதிவு செய்ய போடி, கம்பம் வட்டாரங்களில் உள்ள தலா 35 ரேஷன் கடைகளுக்கு புதிதாக கருவிழி பதிவு செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் பற்றி பணியாளர்களிடம் அதிகாரிகள் கருத்து கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளிலும் கருவிழி பதிவு கருவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் கைரேகை பதிவு ஆகவில்லை என்ற பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ