உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மதுபான விளம்பரம் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் மதுபான விளம்பரம் கண்டு கொள்ளாத அதிகாரிகள்

தேனி: குமுளி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் மதுபாட்டில் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.குமுளி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மாவட்டத்தின் முக்கிய சாலையாகும். இந்த ரோட்டில் பிற மாநிலங்களில் இருந்து சபரிமலை செல்ல பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், சுற்றுலாவிற்காகவும் அதிகம் வருகின்றனர். இந்த ரோட்டில் மதுராபுரி விலக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி பலகைக்கு அருகே தனியார் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் இயக்கும் மதுபார் செயல்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பார் க்கு அதிக வாடிக்கையாளர்கள் வராததால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மதுபாட்டில்களுடன் மெகா சைஸ் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.இந்த விளம்பர பலகை இரவிலும் பளிச்சிடுவதால் இவ்வழியாக வரும் லாரி, சரக்கு வேன் உள்ளிட்ட சில வாகனங்கள் திடீரென வாகனங்களை ரோட்டின் ஓரத்திலேயே நிறுத்து கின்றனர். இதனால் அதனை தொடர்ந்துவரும் வாகனங்களும், ரோட்டில் நின்றுள்ள வாகனங்கள் மீது மற்ற வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. சிலர் மதுக்கடையில் குடித்து விட்டு எதிர் திசையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுகின்றனர்.கடந்த ஆண்டுகளில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட சில நுாறு மீட்டருக்கு அப்பால் மதுகடைகள் இயக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு தற்போது காற்றில் பறந்து தேசிய நெடுஞ்சாலையில் விளம்பர பலகை அமைத்து வியாபாரம் செய்வது விபத்தை வரவழைக்கும் இடமாக மாறியுள்ளது.மதுபான விளம்பரத்தை அரசு அதிகாரிகள் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை.விபத்துக்கள் ஏற்படும் முன் அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை