உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கார் - ஆட்டோ மோதல் ஒருவர் பலி

கார் - ஆட்டோ மோதல் ஒருவர் பலி

தேனி : தேனி கோடாங்கிபட்டி தனியார் பள்ளி அருகே சென்ற ஆட்டோ, எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் பண்ணைத்தோப்பை சேர்ந்த இருளன் மகன் ஹரிஹரன் 17, உயிரிழந்தார். முத்துத்தேவன்பட்டி ஆட்டோ டிரைவர் வனமுத்து 23.இவர் தனது ஆட்டோவில் பண்ணைத்தோப்பை சேர்ந்த தயாநிதி 24, இறந்த ஹரிஹரனுடன் கோடாங்கிபட்டியில் இருந்து பண்ணைத் தோப்புக்கு சென்றனர். தனியார் பள்ளி அருகே சென்ற போது முன்னே சென்ற வாகனத்தை ஆட்டோ முந்திச் செல்ல முயன்ற போது எதிரே மூணாறில் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹரிஹரன், வனமுத்து, தயாநிதி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பினர். மருத்துவனைக்கு சென்ற சிறிது நேரத்தில் ஹரிஹரன் உயிரிழந்தார். இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்