| ADDED : மார் 29, 2024 06:00 AM
கம்பம் : பா.ஜ., அ.ம.மு.க., கூட்டணியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தங்களை கண்டு கொள்வது இல்லை புலம்புகின்றனர்.தேனி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணியில் நாராயணசாமியும், அ.ம.மு.க. பா.ஜ. கூட்டணியில் தினகரன், நாம் தமிழர் கட்சி மதன் போட்டியிடுகின்றனர்.தி.மு.க. வில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணி நடக்கிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து செயலாற்றுகிறது. ஆனால் அ.ம.மு.க. வில் ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது.அ.ம.மு.க.,வுடன் பா.ஜ. மட்டுமே களத்தில் உள்ளது. தினகரன் பிரசாரத்தில் பா.ஜ. வினரே அதிகம் வருகின்றனர். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களில் பெரும்பாலோர் ஆப்சென்ட் ஆகி வருகின்றனர். மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் கணிசமாக உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வேட்பு மனு தாக்கலன்று ஓ.பி.எஸ் அவர்களே காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருந்தது என்றும், எங்களை யாரும் இதுவரை தேர்தல் பணிக்கு அழைக்கவில்லை என்றும் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.