உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூளைச்சாவு பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பெரியகுளம்,:பெரியகுளம் வடகரை மகாத்மாகாந்திஜி தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போஸ்ட்மேன் மாரிமுத்து மகள் தங்கஉமா, 43. இவரது கணவர் அன்புராஜன், 48. சென்னை வியாசார்பாடி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வித்யா, 22, மோனிகா ஸ்ரீ, 13, இரு மகள்கள் உள்ளனர். தங்க உமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அவரது கணவர் அன்புராஜன் ஒப்புதல்படி, தங்க உமாவின் கண்கள், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. தங்க உமா உடலுக்கு, தமிழக அரசு சார்பில் துணை ஆட்சியர் கண்ணன், நலப்பணிகள் மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி