உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெளி மாநில பெண் தொழிலாளி கொலை: உடன் வசித்தவர் கைது

வெளி மாநில பெண் தொழிலாளி கொலை: உடன் வசித்தவர் கைது

மூணாறு : உடும்பன்சோலை அருகே வெளி மாநில பெண் தொழிலாளி இறப்பு கொலை என தெரியவந்ததால், அவருடன் வசித்தவரை போலீசார் கைது செய்தனர்.மத்தியபிரதேசம் மாநிலம் டின்டோரி பகுதியைச் சேர்ந்தவர் லம்முசிக்துர்வே 27, அதே பகுதியைச் சேர்ந்த பெண் பஷந்தி 40.இவர்கள், இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே வெங்கலபாறை பகுதியில் உள்ள தனியார் ஏலத்தோட்டத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர்.ஆக.15ல் பஷந்தி வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். பணி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த போது பஷந்தி இறந்த கிடப்பதை பார்த்ததாக லம்முசிக்துர்வே போலீசாரிடம் கூறினார்.இந்நிலையில் பஷந்தியின் வரிச்சு எலும்புகள் முறிந்து உள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.அதனையடுத்து லம்முசிக்துர்வேயிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.மது போதைக்கு அடிமையான இருவரும் சம்பவத்தன்று வழக்கம்போல் மது அருந்தினர். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லம்முசிக்துர்வே தாக்கியதில் பஷந்தி இறந்தார் என தெரிவந்தது. உடும்பன்சோலை போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி