உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பயணிகள் தவிப்பு

போடி பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பயணிகள் தவிப்பு

போடி: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போடி பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை, பஸ் வரும் நேரம் குறித்த அட்டவணை பலகை இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருந்து பயணம் செய்து சிரமம் அடைகின்றனர்.தமிழக கேரளா பகுதியை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு கேரளாவில் இருந்தும், போடியை சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தினம் தோறும் போடியில் இருந்து கிராம மார்க்கமாக 23 பஸ்களும், தேனி மார்க்கமாக 43 பஸ்களும் செல்கின்றன. வெயிலின் தாக்கத்தில் இருந்து பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் 12 ஆண்டுகளுக்கு முன் இரும்பு நாற்காலி நிழற்குடை அமைக்கப்பட்டன. இங்கிருந்த இரும்பு நாற்காலியை சமூக விரோதிகள் திருடி சென்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் தற்போது துர்நாற்றம் வீசுகிறது. சமூக விரோதிகள் அமரும் பகுதியாக மாறி உள்ளது.இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். நிழற்குடை வசதி இல்லாததால் பஸ்களின் வருகைக்காக பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை தொடர்கிறது. போடியில் இருந்து பஸ் புறப்படும் நேரம், வரும் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் நேர அட்டவணை பலகை இல்லை. இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.நிழற்குடை, பஸ் வரும் நேரத்திற்கான கால அட்டவணை அமைத்து தர நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி, போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை