உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

அடிப்படை வசதிகள் இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்

போடி: போடி அருகே சிலமலை மயானத்தில் தண்ணீர், மின்வசதி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அருகே சிலமலை ஊராட்சி பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிலமலை வடக்கு பகுதியில் உள்ள பொது மயானத்திற்கு செல்ல ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இறந்தவர்களுக்கு மயானத்தில் இறுதி சடங்கு செய்ய தண்ணீர் வசதி இல்லாததால் நீண்ட தூரம் சென்று தோட்ட கிணற்று தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எரியூட்டு மையம் இல்லாததால் திறந்த வெளியில் எரியூட்டி வருகின்றனர். மழை காலங்களில் பொதுமக்கள் ஒதுங்கி நிற்பதற்கு கூட நிழற்குடை வசதி இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர். மின்வசதி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ