|  ADDED : மார் 22, 2024 05:30 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
பெரியகுளம்: தினமலர் செய்தி எதிரொலியாக பெரியகுளம் டி.எஸ்.பி., யாக சூரகுமரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.பெரியகுளம் டி.எஸ்.பி., கீதா கடந்த ஆண்டு டிச., பணிமாறுதலில்  சென்னை சென்றார்.உசிலம்பட்டி டி.எஸ்.பி., ஆக இருந்த நல்லு  பெரியகுளம் டி.எஸ்.பி., ஆக மாற்றப்பட்டார். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முந்தைய நாட்களில் தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டியில் பணியாற்றிய நல்லு, பெரியகுளத்திலிருந்து  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். மதுரை அண்ணாநகர் உதவி ஆணையர் சூரகுமரன் பெரியகுளம் டி.எஸ்.பி.,ஆக மாறுதல் செய்யப்பட்டார்.  பொறுப்பேற்கவில்லை. இரு மாதங்களாக தேனி எஸ்.பி.,அலுவலகத்தில் பல்வேறு பிரிவுகளில் டி.எஸ்.பி.,ஆக பணிபுரியும் ஞானரவி தங்கதுரை,கருணாகரன், சக்திவேல் ஆகியோர்  சுழற்சி முறையில் பெரியகுளம் டி.எஸ்.பி., ஆக பொறுப்பில் இருந்தனர். நிரந்தரடி.எஸ்.பி., இல்லாததால்  பெரியகுளம்  சப் டிவிஷன் பகுதியில்  சட்ட விரோத செயல்கள் கொடிகட்டி பறந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக விடுப்பில் இருந்த டி.எஸ்.பி., சூரகுமரன் உடனடியாக  பொறுப்பேற்றார்.