உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பார்வை இழந்த பெண் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்க கோரி மனு

பார்வை இழந்த பெண் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்க கோரி மனு

போடி : போடி அருகே சிலமலையில் வசிக்கும் பார்வை இழந்த பெண் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு ஜமாபந்தியில் நேற்று மனு கொடுத்துள்ளார்.சிலமலை பெருமாள்கோயில் 3 வது தெரு கணேசன் மகள் மணிமேகலை 25. இவருக்கு 4ம் வகுப்பு படிக்கும் போது 9 வயதில் பார்வை இழப்பு ஏற்பட்டது. மீண்டும் பார்வை பெற முடியாததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.இவரது வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கழிப்பறை இல்லாததால் வெளியில் கழிப்பிடம் செல்ல பெண்களை துணைக்கு அழைத்து செல்லும் நிலையில் சிரமம் அடைந்தனர்.தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி செய்து தர சிலமலை ஊராட்சி, போடி ஒன்றிய அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் முன்னாள் கலெக்டர் முரளீதரன், பார்வை இழந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று உத்தரவில் அவரது வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டது. இடம் இருந்தால் வீடு ஒதுக்கீடு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார். தனது மகள் மணிமேகலைக்கு 653 சதுர அடி வீட்டுமனை இடத்தை கணேசன் தானமாக வழங்கினார். அதன் பின் போடி ஒன்றிய அதிகாரிகளிடம் வீடு கேட்டு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நேற்று போடியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி தலைமையில் நேற்று நடந்த ஜமாபந்தியில், 'தனக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியாக சேர்ந்து வீடு ஒதுக்கீடு செய்து தரக்கோரி மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ