உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 180 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு

180 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு

தேனி: மாவட்டத்தில் 180 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி கோரி சிவசேனா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன் தலைமையில், விநாயகர் போல் வேடம் அணிந்த நிர்வாகி ஒருவர், மற்றும் சிலருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:செப்.7 ல் விநாயகர் சுதுர்த்தி அன்று தேனி மாவட்டத்தில் 180 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, நாள் முழுவதும் பூஜை செய்ய உள்ளோம்.செப்., 9ல் மாலை 4:00 மணிக்கு 100 விநாயகர் சிலைகளை அல்லிநகரம் பொம்மையக் கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று பழைய பஸ் ஸ்டாண்ட் நேரு சிலை வழியாக அரண்மனைப்புதுார் கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் விசர்ஜனம் செய்யவும், நிகழ்வில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.மீதியுள்ள சிலைகள் அந்தந்த இடங்களில் உள்ள நீர்நிலைகளில்விசர்ஜனம் செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி