உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்

ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்

தேனி: மாவட்டத்தில் நேற்று தாலுகா அலுவலங்களில் ஜமாபந்தி துவங்கியது. பொதுமக்கள் 1208 மனுக்கள் வழங்கினர்.மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நேற்று துவங்கியது.இதில் பட்டா மாறுதல், வீட்டுமனைபட்டா, பிறப்பு, இறப்பு, வருமானவரி சான்றிதழ்கள், ரேஷன்கார்டு, நிவாரணம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 1208 மனுக்கள் வழங்கினர். உத்தமபாளையத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். பொதுமக்கள் 83 மனுக்களை வழங்கினர். பெரியகுளத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமை வகித்தார். 139 மனுக்கள் வழங்கினர்.தேனியில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இங்கு 394 மனுக்கள் வழங்கப்பட்டன. ஆண்டிப்பட்டியில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தலைமை வகித்தார். இங்கு 375 மனுக்கள் வழங்கப்பட்டன. போடியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி தலைமை வகித்தார். இங்கு 217 மனுக்களை வழங்கினர். மாவட்டத்தில் நேற்று மட்டும் ஜமாபந்தியில் 1208 மனுக்கள் வழங்கப்பட்டன. ஜூலை 5 வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை