உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

தாய் மாயம்: மகன் புகார்தேனி: அல்லிநகரம் ஹைஸ்கூல் தெரு அமுதா 58. இவரது கணவர் பூவண்ணன் 62. உறவினர் இறந்த நிலையில் பூவண்ணன் மனைவியை குடிபோதையில் திட்டியுள்ளார். இதனால் அமுதா வீட்டை விட்டு சென்றுவிட்டார். அமுதாவின் மகன் முனீஸ்வரன் 34, புகாரில், காணாமல் போன அமுதாவை அல்லிநகரம் போலீசார் தேடி வருகின்றனர்.மதுபாட்டில் பதுக்கிய மூவர் கைதுதேனி: அல்லிநகரம் போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான போலீசார் அல்லிநகரம் காந்திநகருக்கு செல்லும் ரோட்டில் கட்டண கழிப்பறை அருகே ரோந்து சென்றனர். அங்கு காமயக்கவுண்டன்பட்டி கருமாரிபுரம் செந்தில்குமார், கம்பம் வடக்குபட்டி முருகன் அரச அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக ரூ.3780 மதிப்புள்ள 27 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கியிருந்தனர். போலீசார் கைது செய்ய முற்பட்டபோது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்த முருகன் தப்பி ஓடினார். இருவர் மீது வழக்குப்பதிந்த அல்லிநகரம் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.தேனி: பேலீசார் ரோந்துப் பணியின் போது அல்லிநகரம் வெங்கலாகோயில் பகுதியை சேர்ந்த கண்ணன் 42. தேனி கம்போஸ்ட் யார்டு தெரு சங்கர்கணேஷ் 27, ஆகிய இருவர் ரூ.4200 மதிப்புள்ள 30 மதுபாட்டில்களை சட்டவிரோத விற்பனைக்காக பெட்டிக்கடையில் பதுக்கி விற்பனை செய்தனர். இருவரையும் கைது செய்து, பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குதேனி: சின்னமனுார் அணைப்பட்டி சண்முகநாதன் கோயில் தெரு பிரியா 27. இவருக்கும் அதேப்பகுதி ஆண்டாள் கோயில் தெரு ஜெகனுக்கும் 37, பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த 7 மாதங்களாக பிரியாவிற்கும் அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஜூலை 7 ல் பிரியா பணிபுரியும் கடை முன் சென்ற ஜெகன், தகாத வார்த்தைகளால் பேசி, தான் அணிந்திருந்த ஹெல்மெட்'டால் மனைவியைதலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இதில் பிரியாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார். மனைவி புகாரில் கணவர் ஜெகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ