அலைபேசியில் ஆடை மாற்றும் ஆபாச படம்: மூவர் கைது
பெரியகுளம்:பெண் ஆடை மாற்றுவதை அலைபேசியில் வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்த பெண் உட்பட 3 பேரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி வடக்கு தெரு பால்சாமி மனைவி ராஜலட்சுமி 38. இவரிடம் நட்பாக பழகிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த தனலட்சுமி, ராஜலட்சுமி ஆடை மாற்றுவதை அலைபேசியில் வீடியோ எடுத்தார். இவரது கணவர் ஆனந்தராஜ் 32, வீடியோ எடுக்க தூண்டி உள்ளார். இந்த வீடியோவை வைத்து ஆனந்தராஜ் தம்பி சின்னச்சாமி 28, ராஜலட்சுமியை தகாத உறவுக்கு அழைத்தார். ராஜலட்சுமி புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் தனலட்சுமி, ஆனந்தராஜ், சின்னச்சாமி உட்பட மூவரை கைது செய்தனர்.