உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

நாளை பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம்

தேனி: மாவட்டத்தில் நாளை (மார்ச் 8) தாலுகா வாரியாக பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் குறிப்பிட்ட இடங்களில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் ரேஷன் தொடர்பான புகார்கள், கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.முகாம் நடைபெறும் இடங்கள் : பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி ரேஷன்கடை, தேனி நாகலாபுரம் ரேஷன்கடை, ஆண்டிபட்டி கொப்பையம்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் கிருஷ்ணம்பட்டி ரேஷன்கடை, போடி சிலமலை ரேஷன் கடையில் நடக்கிறது. கூட்டங்களை நடத்த துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை