உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாறு அணையில் இரண்டரை மாதத்திற்குப்பின் மழை

முல்லைப் பெரியாறு அணையில் இரண்டரை மாதத்திற்குப்பின் மழை

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் இரண்டரை மாதத்திற்குப் பின் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து மழை பெய்து நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது.2024 டிச.13ல் முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியான பெரியாறில் 101 மி.மீ., தேக்கடியில் 108 மி.மீ., மழை பெய்தது.இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 651 கன அடியாக அதிகரித்தது.நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து 130 அடியை எட்டியது. அதன் பின் மழை தொடராமல் நீர்மட்டம் குறையத் துவங்கி நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 115.50 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இந்நிலையில் இரண்டரை மாதத்திற்குப் பின் நேற்று பெரியாறில் 2.4 மி.மீ., தேக்கடியில் 3.2 மி.மீ.,மழை பெய்தது. இதனால் 92 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது.நீர் இருப்பு 1817 மில்லியன் கன அடியாகும். பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்து நீர்மட்டம் உயருமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை