உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எள் சாகுபடிக்கு தயார்

எள் சாகுபடிக்கு தயார்

கம்பம் : கம்பம் பள்ளத்தாத்தில் சித்திரை பட்டத்தில் என்ன ரகம் எள்ளு சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் 1500 எக்டேர் வரை எள்ளு சாகுபடியாகிறது.ஆண்டுதோறும் சித்திரை பட்டத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் எள்ளு சாகுபடி செய்கின்றனர். தற்போது நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.மழை பெய்ததும் விதைப்பு பணிகளை துவக்குவார்கள். இந்த பட்டத்தில் என்ன ரகங்களை தேர்வு செய்யலாம் என வேளாண் துறையினர் கூறுகையில்,''ஐ. 4, டி.எம்.வி. 7, எஸ்.வி.பி.ஆர் 1 ஆகிய ரகங்கள் சிறந்தது. இந்த 3 ரகங்களும் 75 முதல் 90 நாட்கள் மகசூல் காலமாகும்.800 கிலோவிலிருந்து 1100 கிலோ வரை எக்டருக்கு மகசூல் கிடைக்கும்.வேர் அழுகல், இலைப் புள்ளி உள்ளிட்ட சில நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். வேளாண் துறையில் இந்த 3 ரகங்களில் ஒரு ரகம் தற்போது இருப்பு உள்ளது. 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. விரும்பும் விவசாயிகள் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்'', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை