உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண்டல கூடைப்பந்து போட்டி

மண்டல கூடைப்பந்து போட்டி

தேனி : தேனி கம்மவார் சங்கம் பாலிக்டெக்னிக்கில் மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது. போட்டியை தேனி கம்மவார் சங்க துணைத் தலைவர் பாண்டியராஜ், பொதுச் செயலாளர் மகேஷ் துவக்கி வைத்தனர். முதலிடத்தை விருதுநகர் வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக், 2ம் இடத்தை தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக், 3ம் இடத்தை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் பொருளாளர் தாமரைக்கண்ணன் வழங்கினார். போட்டிகளை செயலாளர் சீனிவாசன், முதல்வர் தர்மலிங்கம், ஆசிரியர் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி