| ADDED : ஜூலை 10, 2024 04:58 AM
கம்பம், : கம்பம் நகரில் குறிப்பிட்ட சில வீதிகளில் நகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் காலை ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்,கம்பம் மெயின் ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டது. மெயின்ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பனிமனையிலிருந்து அரசு மருத்துவமனை வரை ஆக்கிரமிப்புக்களை அகற்றினார்கள். நகராட்சி எப்போது ஆக்கிரமிப்புக்களை அகற்றும் என கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காந்திஜி வீதி, பார்க் ரோடு, உழவர் சந்தை ரோடு உள்ளிட்ட சில வீதிகளில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற நகராட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களோ கண்டு கொள்ளாமல் இருந்தனர்.நேற்று முன்தினம் காலை கமிஷனர் குடியிருப்பு, பார்க் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியை நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ரோட்டை ஆக்கிரமித்தும், சாக்கடையை முடியும் கடைகள் அமைத்திருந்தது காலி செய்யப்பட்டது.