உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை

விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்க கோரிக்கை

தேனி: தேர்தல் பணியில் பங்கேற்ற வசதியாக இன்று(ஏப்.,17) நடைபெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும்பணியை ஒத்திவைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி இரவு வரை நீடிக்கிறது. இப்பணியை முடிந்து ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை(ஏப்.,18) காலை தேர்தல் பணி பயிற்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு மேல் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,22க்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை