உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உழவர் சந்தை நடைபாதை கடைகளை அகற்ற கோரிக்கை

உழவர் சந்தை நடைபாதை கடைகளை அகற்ற கோரிக்கை

கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் நடைபாதைகளில் கடைகள் செயல்படுவதால் பெண்கள் காய்கறி வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.கம்பம் உழவர் சந்தையில் தினமும் 30 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. அதிகாலை முதல் மதியம் வரை கூட்டம் இருக்கும். இந்த சந்தையில் 63 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 80க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக அனுமதிக்கப்பட்ட கடைகள் நடைபாதைகளில் செயல்படுகிறது. இதனால் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் குனிந்து காய்கறி வாங்க முடியாத நிலை உள்ளது. சில விரும்பதாகாத சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நடக்கிறது.இதனால் பெண்கள் மன உளைச்சலுடன் செல்கின்றனர்.உழவர் சந்தையை சுற்றியுள்ள வீதிகளில் காய்கறி கடைகள் வீதிகளில் வைத்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. வேளாண் வணிக துணை இயக்குனர் உழவர் சந்தையை ஆய்வு செய்து, நடைபாதையை சரி செய்து பெண்கள் எளிதாக வந்த செல்ல வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை