உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீதிபதி சந்துரு அறிக்கையை தள்ளுபடி செய்ய கோரி தீர்மானம்

நீதிபதி சந்துரு அறிக்கையை தள்ளுபடி செய்ய கோரி தீர்மானம்

தேனி: தேனி அல்லிநகரம் பிறமலைக்கள்ளர் சங்க கட்டடத்தில் டி.என்.டி., மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நகரத்தலைவர் வனராஜ் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சீர்மரபினர்கள் 68 சமூகத்திற்கும் டி.என்.டி., என ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர் பள்ளிகள், விடுதிகளை கல்வித்துறையுடன் இணைப்பதை ரத்து செய்ய வேண்டும். நீதிபதி சந்துரு அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும். 68 ஜாதியினருக்கும் டி.என்.டி., சான்றிதழ் வழங்காவிட்டால் ஆக.,31ல் மாநில அளவில் தொடர்போராட்டம் செய்வது என 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் தவமணி, மகளிரணி தலைவி ஈஸ்வரி, செயலாளர் பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி