உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

தேனி, : 'தேனி அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.அடிப்படை ஆதாரமற்ற புகார் மனுக்கள் மீது விசாரணை என ஊழியர்களை மன உளைச்சல் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். புகார்தாரரை நேரில் அழைத்து ஆவணங்களை பெற்று விசாரணை நடத்த வேண்டும். 2024 ஜன.,1 அடிப்படையிலான பணிமூப்பு பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.பொது மக்கள், அலுவலர்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.' உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ