உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பாரஸ்ட் ரோட்டில் கழிவுநீரால் சுகாதாரகேடு

தேனி பாரஸ்ட் ரோட்டில் கழிவுநீரால் சுகாதாரகேடு

தேனி, : தேனி நகராட்சியில் பாரஸ்ட் ரோடு அன்னப்பராஜா மண்டபம் சந்திப்பில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுகாதாரகேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.நகராட்சி பாரஸ்ட் ரோடு சந்திப்பில் உள்ள திருமண மண்டபம் சந்திப்பில் மீன் கடை உள்ளது. இதன் அருகே உள்ள கழிவுநீரோடையில் என்.ஆர்.டி., நகரில் இருந்து தாழ்வான சாக்கடை கால்வாயில் வரும் கழிவுநீர் தேங்கி ரோட்டில் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு நிலவி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு வந்து செல்வோர் முகம் சுளிக்க வேண்டிய நிலை உள்ளது. கொண்டுராஜா லைன் நேதாஜி ரோட்டில் கொட்டப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ