மரக்கன்று நடும் விழா
தேனி: புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் செப்.,8 உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட உள்ளது. நுாறு சதவீத எழுத்தறிவு பெற்ற மாநில இலக்கை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 677 புதிய பாரத எழுத்தறிவு மையங்களிலும் மரம் நடுதல், உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மரகன்றுகள் நடும் விழா நடந்தது. சி.இ.ஓ., இந்திராணி தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார்.