உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தேர்வு

போடி : போடி லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு முன்னாள் மாவட்ட ஆளுநர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட ஆளுநர் மோகன்சிங், மாவட்ட முதல் நிலை துணை ஆளுநர் செல்வம், மாவட்ட தலைவர் நவநீதன், மண்டல தலைவர் சுதந்திரராஜன் முன்னிலை வகித்தனர். புதிய தலைவராக முகமது ஷேக் இப்ராஹிம், செயலாளராக நவநீதகிருஷ்ணன், பொருளாளராக சண்முக விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் 10 ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. கரட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேக்குகள் வழங்கப்பட்டன. முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம், பொருளாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை