| ADDED : மார் 24, 2024 05:47 AM
தேனி : 'மாணவர்களுக்கு சுய ஒழுக்கமும், பண்பும் மிக முக்கியமானது', என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் ஷீலா பேசினார்.தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் ஷீலா மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: 'வாழ்கையில் கல்வி முக்கியமானது போல் சுய ஒழுக்கம், பண்பும் முக்கியமானது. வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் தேடல் முக்கியமானது. கல்வியால் தான் உலகில் மாற்றத்தை உருவாக்க இயலும். மாணவிகள் தன்னம்பிக்கையுடன் மற்றவரை குறை கூறாமல் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். சிறுவயது திருமணம் செய்து வைக்க கூடாது. அனைவரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்,' என்றார்.விழாவில் பல்கலை அளவில் முதலிடம் பிடித்த 13, இரண்டாம் இடம் பிடித்த 11 மாணவிகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. முதுநிலை, இளநிலை பட்டபடிப்பு முடித்த 845 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், கல்லுாரி செயலாளர் காசிபிரபு, கல்லுாரி முதல்வர் சித்ரா, இணைச்செயலாளர்கள் செண்பகராஜன், அருண், துணை முதல்வர்கள் சுசீலா, சரண்யா, உமாகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.