உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு ஐந்தாண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு ஐந்தாண்டுகள் சிறை

தேனி : தேனி மாவட்டத்தில் தாய் வேலைக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்த 5 ம்வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போடியை சேர்ந்த கார்த்திக்கிற்கு 31, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.போடி டி.வி.கே.கே., நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு கார்த்திக். இவர் 2022 அக்., 21ல் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அத்துமீறி வீட்டில் நுழைந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தார். அவரிடம் இருந்து தப்பிய சிறுமி கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம் கூறியுள்ளார்.தாய், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்த அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் காயத்திரி, வாலிபரை கைது செய்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் விவேகானந்தன் ஆஜரானார்.நீதிபதி கணேசன், கார்த்திக்கிற்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை