உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: மூன்று பேர் கைது

கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: மூன்று பேர் கைது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி வினோபா நகரைச் சேர்ந்தவர் செல்வம் 46. அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு 3 டூவீலரில் 9 பேர், அரிவாள், கத்தியுடன் வந்து செல்வத்தை ஜாதியை சொல்லி திட்டி காலில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன், டி.காமக்கபட்டி சந்துரு 23. கெங்குவார்பட்டி புவனேஸ்வரன் 22. விமல்ராஜ் 21.பிரபாகரன் 28. சிவா 19. வேல்முருகன் 21.ரோஹித் 21, நிகிலன் 23 ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து, சந்துரு, புவனேஸ்வரன், விமல்ராஜை கைது செய்தனர்.கெங்குவார்பட்டி கம்பெனி தெரு ஆட்டோ டிரைவர் விருமாண்டி 29,புகாரில், முன் விரோதம் காரணமாக செல்வத்தின் மகன் ரிசாத்ராஜ் 24. இவரது நண்பர்கள் சதீஷ், விக்கி ஆகியோர் அரிவாள் கத்தியுடன் கெங்குவார்பட்டி ரோட்டில்எனது ஆட்டோவை வழிமறித்து அவதூறாக பேசி, ஆயுதங்களை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை