உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை விற்ற கடைகளுக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம் உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல் சோதனை

புகையிலை விற்ற கடைகளுக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம் உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல் சோதனை

தேனி: சின்னமனுார் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளில் புகையிலை பறிமுதல் செய்து தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து 'சீல்' வைக்கப்பட்டது. உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்காமல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் சிக்கினர்.மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து மாவட்ட நிர்வாகம் சோதனை தீவிரப்படுத்துகிறது. சின்னமனுாரில் மளிகை,டீக்கடைகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து புகையிலை பொருட்கள் விற்பதாக கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் நேற்று கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுரேஷ்கண்ணன், மணிமாறன், மதன்குமார் சோதனை மேற்கொண்டனர்.துாய்மைப்பணியாளர்கள் காலனியில் உள்ள மளிகை கடை உரிமையாளர் ராமன் என்பவரது வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 கிலோ புகையிலைப்பொருட்கள், அதே பகுதியில் ஜெய்லானி,ஷேக் ஆகியோர் மளிகை கடை, நகர்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் கூறுகையில், இக்கடைகளில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்து 2வது முறையாக பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் 3கடைகளுக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து , 15 நாட்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு கடைகள் 15 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சில்லரை மது விற்பனை பற்றி 10581 அல்லது 93638 73078 என்ற அலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் கூறுபவர்கள் பற்றி விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை