உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு இரட்டை ஆயுள் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு இரட்டை ஆயுள் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 18 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 45 வயது தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பெரியகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த 45 வயது தந்தை 18 வயது மகளை 2020 மே 13 இரவில் வீட்டில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி கர்ப்பமுற்றார். அவருக்கு ஆண் குழந்தை 2021 பிப்.,2 பிறந்துள்ளது. பிரசவம் நடந்த ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் சமூகநலத்துறையில் புகார் அளித்தனர். பின் மாவட்ட சிறார் நலக்குழு களப்பணியாளர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அதில் தந்தையே தன்னை பலாத்காரம் செய்ததால் கர்ப்பமடைந்ததாக சிறுமி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். பின் தந்தையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா 2021ல் டிச., 15ல் கைது செய்தார்.இவ்வழக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். நீதிபதி கணேசன், 45 வயது தந்தைக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை