உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மோதி மாணவர் காயம்

டூவீலர் மோதி மாணவர் காயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவர் ராம்ஜி 21, தேனி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி லேப் டெக்னீசியன் 3ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன் தினம் விடுதியில் இருந்து எம். சுப்பலாபுரம் விலக்கில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். பின்னால் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த ராம்ஜி, பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி