உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளியில் மாணவர் சங்க தலைவர் தேர்தல்

பள்ளியில் மாணவர் சங்க தலைவர் தேர்தல்

கம்பம், : கம்பம் நாலந்தா இன்னோவேசன் பள்ளியில் மாணவர் சங்க தலைவர் தேர்தல் நடந்தது.தலைவர் பதவிக்கு 8 மாணவர்கள், 3 மாணவிகள் உள்பட 11 பேர்வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று காலை பள்ளியில் தேர்தல் நடைபெற்றது. இங்கு 850 ஒட்டுக்கள் உள்ளன. பொதுத் தேர்தல் போன்று பெயரை சரிபார்த்தல், ஒட்டு சீட்டை பெறுதல், கை விரலில் மை வைத்தல், பின்னர் ஓட்டை பதிவு செய்தல் நடைபெற்றது.மாணவர்கள் மத்தியில் பள்ளியின் தாளாளர் விஸ்வநாதன் பேசுகையில், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்ளது. சமீபத்திய தேர்தலில் ஒட்டுப் பதிவு சதவீதம் குறைகிறது. எனவே,தேர்தல் முக்கியத்துவத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பதிவான ஒட்டுக்களின் ஜூலை முதல் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார். தேர்தல் பணியில் பள்ளியின் ஆசிரியைகள் சூர்யபிரபா, யுவஸ்ரீ, அபிநயா, ஹேமப்ரியா, ராபியா முன்னின்று நடத்தினார்கள். ஏற்பாடுகளை முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி , அலுவலக கண்காணிப்பாளர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்