உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மானியத்தில் தக்கை பூண்டு விதை

மானியத்தில் தக்கை பூண்டு விதை

போடி இயற்கை உரத்திற்கான தக்கை பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போடி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் சாகுபடியில் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை மாறி வருகிறது. இதனை தவிர்க்க தக்கைப் பூண்டு விதைகளை விதைத்து 45 நாட்களில் நன்கு வளர்ந்து பூ பூக்கும் நிலையில் செடிகளை அதே நிலத்தில் உழுது உரமாக பயன்படுத்தலாம்.இதனால் சூரிய ஒளி மூலம் செடிகளின் வேர்களுக்கு நைட்ரஜன், புரோட்டின் சத்தும் கிடைத்து வருகிறது. மண்ணின் தன்மை மாறாமல், மண் புழுக்கள் இறக்காமல் உரமாகவும் தலைச் சத்தாகவும் பயன்படுகிறது.விவசாயிகள் பயன் பெறும் வகையில் தக்கை பூண்டு செடிகள் பயிரிட வேளாண்துறையில் தக்கைபூண்டு விதைகள் மானியத்தில் வழங்கப் படுகிறது. மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் போக கிலோ ரூ. 49.75 வீதம், ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்படுகிறது.தக்கை பூண்டு பயிரிட விரும்பும் விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோ வுடன் போடி வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ