உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளிப்பட்டியில் கபசுர குடிநீர் பொடி வழங்கல்

சுருளிப்பட்டியில் கபசுர குடிநீர் பொடி வழங்கல்

கம்பம் : சுருளிப்பட்டியில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகள் வீடுதோறும் வழங்கப்பட்டன.மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. கடும் வெப்பம் நிலவிய நிலை மாறி மேகமூட்டமாக உள்ளது. சீதோஷ்ண நிலை மாறியிருப்பதால், மழைகால நோய்களான காய்ச்சல், இருமல், சளி பிடிப்பது ஆரம்பமாகும்.வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சுருளிப்பட்டியில் மழைக் கால நோய் தடுப்பு நடவடிக்கை காமயக்கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் காலனியில் சித்தா டாக்டர் சிராசுதீன் தலைமையில் 100 வீடுகளுக்கு 100 கிராம் கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.கபசுர குடிநீரை காய்ச்சி குடிக்கும் முறை பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விளக்கினார். சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணகுமார், அன்பு , தினேஷ், உள்ளிட்ட கிராம செவிலியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை