உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பு இல்லை

தேனியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு பாதுகாப்பு இல்லை

தேனி: தேனி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குற்ற செயல்களை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமராக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சேதமடைந்த கேமராக்களை நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை ரோட்டில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் மதுரை ரோட்டில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் புது பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றன. சில மாதங்களுக்கு முன் கண்காணிப்பை தீவிரப்படுத்த நவீன கேமராக்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி, அன்னஞ்சி விலக்கு, சிவாஜி நகர் ரோடு சந்திப்பு, ரயில்வே கேட் செல்லும் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டன. சில நாட்களுக்கு முன் அன்னஞ்சி விலக்கு சிவாஜி நகர் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த கேமராவை அடையாளம் தெரியாத வாகனத்தால் சேதமானது. இவை தற்போது பயன்பாடின்றி ரோட்டோரம் வீசப்பட்டுள்ளது. சில சமூக விரோதிகள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. சில் இடங்களில் கேமராக்களின் வயர்கள், பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை