உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, : தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் முன், மாநில முன்னுரிமையில் பதவி உயர்வு வழங்கும் அரசாணை 243ஐ திரும்ப பெற்று, பழைய முறையில் ஒன்றிய முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளிகளில் பணிநிரவல், மாற்றுப்பணி ஆணைகளை ரத்து செய்திட வேண்டும். ஜூலை 3ல் கலந்தாய்வு மையங்கள் முன் மறியல் நடத்தப்படும் எனற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் சரவணமுத்து, ராஜவேல், ராஜன், ராம்குமார், முருகன், சுருளியம்மாள் பேசினர். நிர்வாகி வேணி நன்றிதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை