உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான சிவன்மலை எஸ்டேட், பார்வதி டிவிஷனில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் புனர்நிர்மாணப் பணிகள் நடந்தன.அப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடந்தன. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து முளைப்பாரி, பால்குடம் ஆகியவை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். எஸ்டேட் மேலாளர் பிரமோத்கிருஷ்ணா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ