உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்ற லோக்சபாவில் குரல் கொடுப்பேன் தங்க தமிழ்செல்வன் எம்.பி.,பேச்சு

தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்ற லோக்சபாவில் குரல் கொடுப்பேன் தங்க தமிழ்செல்வன் எம்.பி.,பேச்சு

தேனி: தேனி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து லோக்சபாவில் குரல் கொடுப்பேன் என தங்க தமிழ் செல்வன் எம்.பி., நன்றி தெரிவித்து பேசினார்.தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி எம்.பி., தங்கதமிழ்செல்வன், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தேனி நேருசிலை , பங்களாமேடு, பாரஸ்ட் ரோடு, சமதர்மபுரம், அல்லிநகரம், பொம்மையக்கவுண்டன்பட்டி பகுதியில் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அல்லிநகரத்தில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் பா.ஜ., முழு பெரும்பான்மையில் வெற்றி பெறவில்லை. 3 கட்சிகளை கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். அந்த ஆட்சி ஓராண்டுகூட தாங்காது. இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். உங்களின் குரலாக திண்டுக்கல் - சபரிமலை ரயில்பாதை கொண்டு வரவும், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி மதுரை பைபாஸ் ரோடு அமைக்க குரல் கொடுப்பேன் என்றார்.உடன் தி.மு.க., நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், எம்.எல்.ஏ., சரவணக்குமார், நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், முன்னாள் நகர அமைப்பாளர் பாலமுருகன், விவசாய அணி அமைப்பாளர் சுரேஜ் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ