உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுலா வந்த சிறுவன் பலி

சுற்றுலா வந்த சிறுவன் பலி

மூணாறு, : மூணாறுக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியரின் ஒரு வயது மகன் உடல் நலக்குறைவால் இறந்தான்.கர்நாடகா மாநிலம் கோலாரைச் சேர்ந்தவர் சமீர்கான். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகன் ஜென்னா ஆகியோருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் தனியார் விடுதியில் தங்கினர். சுற்றுலாவை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்புகையில் சிறுவன் ஜென்னாவுக்கு திடிரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மூணாறில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏற்கனவே சிறுவன் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். அதற்கான ஆவணங்களை பெற்றோர் போலீசாரிடம் தாக்கல் செய்ததால் வழக்கு பதிவு செய்யாமல் உடலை கொண்டு செல்ல அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை