உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி

துப்புரவு பணியாளர் தீக்குளிக்க முயற்சி

தேனி:தேனி, மாவட்டம், சிவாஜி நகர் விஸ்வநாததாஸ் காலனியில் வசிப்பவர் ராமகிருஷ்ணன், 50. கொசு மருந்து தெளிக்கும் பணி செய்கிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், கமிஷனர் ஜஹாங்கிர்பாட்சா, ராமகிருஷ்ணனை ‛சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து விபரம் அறிய நேற்று காலை 11:00 மணிக்கு ராமகிருஷ்ணன் நகராட்சி அலுவலகம் வந்தார். கமிஷனர் சந்திக்க அனுமதி தராமல் காக்க வைத்தார்.இதில், விரக்தி அடைந்த ராமகிருஷ்ணன் மண்ணெண்ணெயை கமிஷனர் அறை முன் தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, கையில் வைத்திருந்த எலி மருந்தையும் சாப்பிட்டதாக கூறப்படுகிரது. பணியாளர்கள் ராமகிருஷ்ணனை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.கமிஷனர் கூறுகையில், “முறையாக பணி செய்யவில்லை. பணிக்கு வந்தாலும் பிற பணியாளருக்கு இடையூறு செய்தார். அதனால் நேற்று சஸ்பெண்ட் செய்தேன். இன்று தற்கொலைக்கு முயன்று நாடகம் ஆடியுள்ளார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி