உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி திட்டசாலைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சிக்கு ஆர்வமில்லை போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் மாவட்ட தலைநகர்

தேனி திட்டசாலைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சிக்கு ஆர்வமில்லை போக்குவரத்து நெரிசலால் தவிக்கும் மாவட்ட தலைநகர்

தேனி : தேனி மாவட்ட தலைநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டசாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் நகரம் போக்குவரத்து நெரிசலால் தினமும் திக்கு முக்குகாடுகிறது.தேனி மாவட்ட தலைநகராக தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதிகள் உள்ளன. இங்கு கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அனைத்துத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் உள்ளன. நகர்பகுதியில் அரண்மனைப்புதார் விலக்கு பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க இயலாததாகிறது.நகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் திட்டசாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் முக்கிய சாலைகள் கோட்டைக்களம்- கம்பம் ரோடு, கம்பம் ரோடு-சுப்பன்செட்டி தெரு-அரண்மனைப்புதுார் விலக்கு ரோடுகள் ஆகும். இந்த ரோடுகள் பயன்பாட்டிற்கு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும். இந்த திட்ட சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் தொடர் முயற்சி மேற்கொள்ளாததால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சில மாதங்களுக்கு முன் பெரியகுளம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றினர். ஆனால் தொடர் கண்காணிப்பு இல்லாததால் அதே இடங்களில் மீண்டும் ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்புகின்றனர். அதேவேளை கம்பம் ரோடு, சுப்பன் தெரு, எடமால் தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றததால் நகரம் நெரிசலில் சிக்கி தவிக்கிறது. தேனி நகரின் மேம்பாடு, வளர்ச்சியை கருத்தில்கொண்டு அதிகாரிகள் திட்டசாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி