உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

போடி: போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் 46. இவரது 18 வயது மகள் பிளஸ் டூ தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோர் கோயில் திருவிழா காண்பதற்காக பூதிப்புரம் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். வீட்டில் வந்து பார்த்த போது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. சுரேஷ்குமார் புகாரில் போடி தாலுாகா போலீசார் காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை