தேனி: தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சப் -டிவிஷன்களில் எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் நடந்த புகார்தாரர்கள் குறைதீர் 'பெட்டிஷன் மேளா'வில் 224 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தேனி
தேனி சப்டிவிஷனில் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடந்தது. இதில் 114 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தேனி, அல்லிநகரம், அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் மனுக்கள் அளித்தவர்களை தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்திற்கு வரவழைத்து அவர்கள் மனுக்கள் விசாரித்து தீர்வு வழங்கப்பட்டது. மூன்று போலீஸ் ஸ்டேஷனில் மனுக்கள் அளித்திருந்த 137 மனுதாரர்கள் வர அழைப்பு விடுக்கப்பட்டு, 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெறப்பட்ட 75 மனுக்களுக்கு வீரபாண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மேளா நடந்தது. இதில் 59 மனு தாரர்களுக்கு தீர்வு வழங்கப்பட்டது. இரு இடங்களில் நடந்த மேளாக்களை இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், சிவராமகிருஷ்ணன், கண்மணி, இளவரசன் ஒருங்கிணைத்திருந்தனர். தேனி சப் டிவிஷனில் மொத்தம் 114 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம்மேற்பார்வையில்நடந்த 'பெட்டிசன் மேளா'வில்விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 70 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.இந்த சப்டிவிஷனில் ஆண்டிபட்டி, ராஜதானி, கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, க.விலக்கு, வைகை அணை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களும், ஏத்தக்கோயில், கன்னியப்பபிள்ளைபட்டி ஆகிய 'அவுட்' போலீஸ் ஸ்டேஷன்களும் செயல்படுகின்றன. கடந்த நான்கு மாதங்களில் போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்பட்ட பல மனுக்களுக்கு தீர்வு கிடைக்காமல் நிலுவையில் இருந்தன.இதனைத் தொடர்ந்து அந்தந்த ஸ்டேஷனில் பதிவான புகார் மனுதாரர், எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு அந்த மனுக்கள் மீதான விசாரணையைமுடித்து வைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டனர். பெரியகுளம்
பெரியகுளம்சப்-டிவிஷன் போலீஸ் ஸ்டேஷன்களில் டி.எஸ்.பி., (பொ) குருவெங்கட்ராஜ்மேற்பார்வையில் நடந்த பெட்டிஷன் மேளாவில்40 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.இந்த சப்டிவிஷனில் தென்கரை, வடகரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் ஆகிய 4 போலீஸ் ஸ்டேஷன்களில், தமிழக முதல்வர் தனி பிரிவு மனு, கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் கொடுக்கப்பட்ட மனுக்கள், அந்தந்த ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள மனுக்கள், முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணும் முகாம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. பெரியகுளம் டி.எஸ்.பி.,தலைமை வகித்தார்.வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், எஸ்.ஐ., க்கள் பிரேம் ஆனந்த், ஜான்செல்லத்துரை, கர்ணன், முருகப்பெருமாள், வேல் மணிகண்டன் ஆகியோர் மனுக்களை விசாரித்தனர். இடத்தகராறு, கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்னை உட்பட 8 வகையானபுகார்களில்மொத்தம் 45 மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 40 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு துவங்கிய முகாம் மதியம் 2:00 மணிக்கு நிறைவடைந்தது.